தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக் குறிப்பில், கடையநல்லூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2023-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கையில் சேர புதிய விண்ணப்பங்கள் 31.08.2023 தேதி வரை வரவேற்கப்படுகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்நுட்ப மையம் 4.0ல் ஈராண்டு தொழிற் பிரிவுகளான ADVANCED CNC MACHINING TECHNICIAN (மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்), MECHIANIC ELECTRIC VEHICLE (கம்மியர் மின்சார வாகனம்) மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவான INDUSTRIAL ROBOTICS AND DIGITAL MANUFACTURING TECHNICIAN (தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில் நுட்ப வல்லுநர்) விண்ணப்பிக்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம். மகளிருக்கு வயது வரம்பு இல்லை. மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க கடையல்லூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் அணுகவும்.
பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ750, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000, கூடுதலாக வழங்கப்படும். மிதிவண்டி, சீருடைகள், தையல் கூலி, மூடு காலணிகள் மற்றும் வரைபட கருவிகள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐ.டி.ஐ தொழிற் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப் பாடங்கள் (தமிழ் & ஆங்கிலம்) மட்டும் எழுதி 12-ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். மேலும் எட்டாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐ.டி.ஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ் & ஆங்கிலம் ) மட்டும் எழுதி 10-ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு மீனாட்சி, முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கடையநல்லூர், பண்பொழி ரோடு (அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கடையநல்லூர் அருகில்) என்ற முகவரி மற்றும் தொலைபேசி 04633- 290270 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









