தென்காசி மாவட்டத்தில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொது மக்களிடமிருந்து இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில், மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரப்படும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொது மக்களிடமிருந்து 31.07.2023 வரை நேரடியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
இந்நிலையில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தினை கணிணி மையம் ஆக்குவது தொடர்பாக, அதற்கான வலை பயன்பாடு (Web Application) ஒன்று TNeGA மூலம் தயார் செய்யப்பட்டு அரசு இ-சேவை மையங்களில் அதற்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 01.08.2023 முதல் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. எனவே தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணுப்பங்களை பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









