கீழக்கரையில் வர்த்தக நிறுவனங்களை மாலை 03.00மணியுடன் மூட முடிவு.. உணவு பொருட்கள் பார்சல் சேவை தொடரும்.. வர்த்தக சங்கம் முடிவு..

கீழக்கரை உசைனியா மஹாலில் கீழக்கரை வர்த்தக சங்கக் கூட்டம் தலைவர் மற்றும் செயலாளர் முன்னிலையில் இன்று (23/06/2020) காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களான மருந்தகங்கள், பால் கடை மற்றும் ஹோட்டல்கள் இரவு 08.00 மணிவரை திறப்பதற்கும், அமர்ந்து சாப்பிடும் நேரங்களை 03.00 மணி வரை என தீர்மானித்தும்,   பாரசல் சேவைகளை மட்டும் வழக்கம்போல் செயல்படலாம் என முடிவு செய்யப்பட்டது.

இன்று முதல் (23/06/2020) நடைமுறைக்கு வரும் இக்கடையடைப்பு வருகின்ற 30.06.2020 வரை அமலில் இருக்கும். பொதுநலன் கருதி எடுக்கப்பட்டிருக்கும் இம்முடிவிற்கு வியாபாரிகளும், பொதுமக்களும் ஊர்நலன் மேன்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம் என வர்த்தக சங்கம் வேண்டுகோள்  விடுத்துள்ளது.

நன்றி: மக்கள் டீம், இந்தியன் மார்ட்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!