திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பை கணக்கீடு செய்ய அலுவலர்கள் நியமனம்..

திண்டுக்கல் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாய சேத விவரங்களை கணக்கீடு செய்ய வருவாய்த்துறை, தோட்டக்கலைதுறை மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் சேதமடைந்த பயிர்களை பார்வையிட வரும் அலுவர்களிடம் சேத விவரங்களுடன் தகுந்த ஆவணங்களை( படிவ விபரம்,நடப்பில் உள்ள வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல்,ஆதார் எண் மற்றும் அலைபேசி எண்) வழங்கி ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்படுகிறது.

இதில் பயிர் சேதங்கள் விடுப்பட்டு இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டணமில்லா தொலைபேசி எண்-0451-1077, வாட்ஸ்அப் எண்-7598866000 மற்றும் 0451-2460320 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி ஜி வினய் இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!