ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தேசிய கூட்டணி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை இன்று மதியம் ராமநாதபுரத்தில் பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடிக்கு பிடித்த அரசியல் தலைவர் ஓபிஎஸ். ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையை பெற்றவர் ஓபிஎஸ். நாடாளுமன்றம் செல்லும் போது உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படும. ராமநாதபுரம் என்றால் மோடிக்கு தனி பிரியம். மோடிக்கு பதிலாக ஓபிஎஸ் போட்டியிடுகிறார். 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். ராமநாதபுரம் முதன்மை மாவட்டமாக வர வேண்டுமெனில் ஓபிஎஸ்ஸை வெற்றி. குடிநீர் பிரச்னை நீங்க ஜல் ஜீவன் திட்டம். திமுக ஆட்சியில் புதிய தொழிற்சாலை இல்லை. உலக தலைவர்கள் மோடியுடன் பேச தவம் கிடக்கின்றனர். தனிப்பட்ட அன்பு நம்மை நம்பி வந்த ஓபிஎஸ்ஸை தோற்கடிக்க கூடாது. தமிழக அரசியலில் 2 துரோகம் நடந்துள்ளது. உண்மையான தலைவர் யார் என இந்த தேர்தல் முடிவு. அரசியல் முடிவை மாற்றும் ராமநாதபுரம் மக்கள் . 1974ல் கச்சத்தீவு தாரை வார்ப்பு. மீனவர்களுக்கு துரோகம் செய்தவர் கருணா நிதி. முதன்மை பார்லிமென்ட் உறுப்பினராக ஓபிஎஸ் இருப்பார். ஜாதி, மதத்தை கடந்து முத்துராமலிங்க தேவர் வழியில் ஓபிஎஸ் செயல்படுகிறார். மதுரை – ராமநாதபுரம் நான்கு வழி சாலை, சிறப்பு நிதி மூலம் வைகை – காவிரி – குண்டாறு நதி நீர் இணைப்பு – 2019ல் மீனவருக்கு தனி அமைச்சகம் அமைத்தது. கச்சத்தீவு, தண்ணீர் பிரச்னை, அநீதிக்கு நீதி கோரும் ஓபிஎஸ் பலாப்பழம் தான் தீர்வு. பிரதமரின் விருப்பத்திணங்க ஓபிஎஸ் இங்கு போட்டியிடுகிறார். 15% வாக்கு வித்தியாசத்தில் தற்போது முன்னணியில் உள்ளார் என பஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.





Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









