இமானுவேல் சேகரனின் 66 வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சென்னை செல்வதற்காக தற்போது மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
*சந்திரபாபு நாயுடு கைது குறித்த கேள்விக்கு:*
வேறு மாநிலத்தில் நடக்கும் பிரச்சனை எனக்கு தெரியாது, நான் கருத்து கூறினால் சரியாக இருக்காது. அவரும் ஒரு முன்னாள் முதல்வர் என்பதால் தீர்ப்பு நியாயமாக இருக்க வேண்டும்.
*எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை எதிர்ப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு:*
நல்லது தான் அப்போதுதான் பாஜக வளரும். கலைஞர் இருந்தால் கூட எதிர்ப்புகளை சமமாக கையாண்டு விடுவார். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார் மேலும் தமிழ் காப்பியங்களுக்கு அவர் உரை எழுதுவார். அரசியலில் ஒரு பால்ட் லைன் உருவானால் தான் புதிய கட்சிக்கு வாய்ப்பு கிடைக்கும். மோடியின் திட்டங்கள் மறுபடியும் பாஜகவின் தனித்துவத்தை தாண்டி உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகு பாஜகவின் வளர்ச்சி அதிகம்.
சனாதனத்திற்கு எதிராக ஆதரவாகவும் எதுவும் பேசாமல் வெறும் பேச்சாக மட்டும் இருப்பதை மக்கள் பார்க்கிறார்கள். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் அதை பார்ப்பீர்கள்.
*அமைச்சரின் தலைக்கு பரிசுத்தொகை அறிவிப்பது குறித்த கேள்விக்கு:*
அது தவறு தான் அப்படி ஒருவரின் தலைக்கு பரிசுத்தொகை நிர்ணயிக்கிறார் என்றால் அவர் சனாதனத்தை பின்பற்றவில்லை என்று அர்த்தம். சனாதனத்தை பின்பற்றுகிறேன், ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால் அவர் ஒரு போலி சாமியாராக தான் இருக்க வேண்டும். இதை வன்மையாக கண்டிப்பது மட்டுமல்ல இது ஏற்புடையதல்ல. தலைக்கு வேலை வைப்பதற்கு யார் அவர். வெளியூரிலிருந்து வந்து யாருக்கு விலை வைப்பது.
*சினிமா மூலம் அரசியல் பேசுவது குறித்து இயக்குனர் வெற்றிமாறன் கருத்து குறித்த கேள்விக்கு:*
ஜாதிய வன்மங்கள் கொண்ட திரைப்படங்கள் தமிழ் திரையுலகத்தில் வருகிறது. சினிமாவில் என்ன கருத்துக்களை சொல்கின்றோம் என்பது முக்கியம். முக்கியமான கருத்துக்கள் சினிமா மூலம் சொல்ல வேண்டும் அதற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் ஒரு சில இடங்களில் வன்முறைகள் நடப்பதற்கு சினிமாவே காரணமாகிவிடுகிறது.
*ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு:*
அதற்கான ஒரு வரைமுறை உள்ளது. தற்போது அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. 1952 இல் இருந்து 67 வரை நாலு முறை ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெற்றுள்ளது. இது பாஜகவின் கொள்கை முடிவு தான் ஆனாலும் கூட உடனடியாக கொண்டு வர முடியாது.
*பாரத் பெயரும் மாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற கேள்விக்கு:*
அரசியலமைப்பு அறிஞர்கள் கூட இந்தியாவை பாரத் என்றும் பாரத் என்பதை இந்தியா என்றும் உபயோகிப்பதால் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். இந்தியாவை பாரத் என்று ஒரு சில இடங்களில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியுள்ளார். இல்லாத பிரச்சனையை எதிர்க்கட்சியினர் உருவாக்குகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கின்றது தான் செய்கிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை. பாரதம் என்கிற வார்த்தை இந்தியாவை அழகாக நுட்பமாக காட்டுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து.
*இந்தியா கூட்டணி வந்ததால் பாரதப் பெயர் மாற்றம் இன்று விமர்சனம் குறித்த கேள்விக்கு:*
பாஜக கொண்டு வந்துள்ள பல முக்கிய திட்டங்களில் பாரத் என்கிற பெயர் உள்ளது. எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை எப்பொழுது மக்கள் அவர்களைப் பற்றிய பேசுவதாக சிந்திக்கிறார்கள். இந்தியா கூட்டணி என்று நாங்கள் வைத்ததால் தான் அண்ணாமலை உயிரோடு இருக்கிறார் என்று கூட சொல்வார்கள்.
*பாஜக கூட்டணியில் ஒபிஎஸ் சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு:*
அதிகாரப்பூர்வ கருத்துக்கள் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து மாநில தலைவராக நான் கருத்துக்கூற எதுவும் இல்லை.
*ஜி 20 மாநாட்டிற்கு எதிர்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு விடுக்காதது குறித்த கேள்விக்கு:*
அது கட்சித் தலைவரை அழைப்பதற்கான மாநாடு அல்ல அப்படி என்றால் ஜே.பி.நட்டாவையும் தான் அழைத்திருக்க வேண்டும். முன்னாள் பிரதமர்கள் மற்றும் தற்போதைய முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாரை அழைக்க வேண்டுமோ அழைத்துள்ளார்கள். காங்கிரஸ் தலைவரை அழைக்க வேண்டும் என்றால் ஜேபி நட்டாவையும் அழைக்க வேண்டும் என்று நான் சொல்வேன்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









