முளைச்சு மூனு இலை விடல. அப்பாவின் காசு இருக்குற திமிரில் இவர் சனாதனத்தை ஒழிக்க போகிறேன் என பேசுகிறார் -அண்ணாமலை

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றார்.இதன் ஒரு பகுதியாக 26வது நாள் பயணமாக இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை ரோட்டிலுள்ள கொங்கபட்டி பிரிவிலிருந்து தனது பாதயாத்திரையை துவங்கியுள்ளார்.வழிநெடுகிலும் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெண்கள் அவருக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.பின்னர் உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள முத்துராமலிங்கத்தேவர் மூக்கையாத்தேவர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் முருகன் கோவில் முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது :- ஆங்கிலேயர்கள் போய்விட்டார்கள் அதற்கு பதிலாக திமுகவினர் வந்துவிட்டார்கள். ஆங்கிலேயன் கூட ஊழல் பண்ணல.நம்ம பணத்தை சுரண்டி அவன் நாட்டுக்கு கொண்டு போனான்.ஆனால் திமுக இருக்கிறதே நம் பணத்தை ஊழல் பண்ணி தன் குடும்ப சொத்தாக மாற்றுகின்றனர்.நாம் அனைவரும் வெகுண்டெழ வேண்டிய நேரம் இது. முளைச்சு மூனு இலை விடல. நடிச்சது ஆறே படம். அதுவும் ஓடல.தாத்தா அப்பாவின் காசில் கொழுத்து போய் திமிரில் இவர் சனாதனத்தை ஒழிக்க போகிறார் என்று பேசுகின்றார். அய்யா முத்துராமலிங்கம் இருந்திருந்தால் நடப்பதே வேறு. சுயமரியாதையை விட்டுக் கொடுக்காத மக்கள் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்கிறோம். எனப் பேசினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!