காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது அம்மா உணவகம் மருத்துவமனை நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைப்பதற்காக அப்போதைய முதல் அமைச்சர்.ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது.
இதில் 4 மற்றும் 5 ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மா உணவகம் காலை 7 மணி முதல் 10மணி வரை செயல்படும் இந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் விரைவாக வீடு செல்வதற்காக . காலை 8 மணிக்கே இட்லி மற்றும் சாம்பாரை கொட்டி விட்டு உணவு தீர்ந்து, விட்டது என்று பொது மக்களை திருப்பி அனுப்புகின்றனர். ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் 10 மணி வரை இயங்க வேண்டிய உணவகம் காலை 8 மணிக்கே மூடப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.
எனவே. அரசு அதிகாரிகள் முறையாக விரைந்து நடவடிக்கை எடுத்து உணவகம்10 மணி வரை செயல்பட வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











