பாலக்கோடு வட்டம் நக்கல்பட்டி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் புலிக்கரை பஞ்சாயத்து நக்கல்பட்டி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நேற்று நடைபெற்றது முகாமிற்கு அதிகாரிகள் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீண்ட நேரத்துக்குப் பிறகு புலிக்கரை வருவாய் அலுவலர் சத்தியா அம்மா திட்ட முகாம் நடத்தினர் முகாமில் ஓய்வூதியம் ஸ்மார்ட் கார்ட் விண்ணப்பம் விதவை சான்றிதழ் சிறு குறு விவசாயிகள் சான்றிதழ் மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். அம்மா திட்ட முகாமிற்கு சம்பந்தப்பட்ட எந்தத் துறை அலுவலர்களும் அதிகாரிகளும் கலந்து கொள்வதற்கு வராததால் வருவாய் ஆய்வாளர் சத்தியா மற்றும் கிராம அலுவலர் சிவசங்கர் இருவருமே தொடங்கி முடித்து வைத்தனர். இதனால் மக்கள் முகாமில் பலன்களை தெரிந்து கொள்ள காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.








You must be logged in to post a comment.