சாதனைகள் பல விதம்.. கைக்கடிகாரம் புகைப்படங்கள்  சேகரிப்பு அதில் புது விதம்..

உலகெங்கும் அதியமான முறையில் இருந்து நகைப்புக்குரிய வகையில் பல வகையான சாதனைகளை செய்து வருவதை நாம் தினமும் செய்தித் தாள்களில் பார்த்து வருகிறோம். ஆனால் எண்ணத்தில் எழுந்த ஆசையை பொருளாதார சிக்கலால் நடைமுறைபடுத்த முடியாவிட்டாலும், அந்த எண்ணத்தையே புகைப்பட வடிவில் சாதனை படைத்துள்ளார் மண்டபம் தங்கச்சிமடம் பகுதியை சார்ந்த அனிதா சேதுராஜா என்ற பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவி.

இவருக்கு சிறுவயதில் இருந்தே கைக்கடிகாரம் மீது கொள்ளை பிரியம். ஆனால் சூழல் காரணமாக அதை வாங்கமுடியவில்லை, ஆனால் அந்த ஆசையை கைக்கடிகாரத்தின் புகைப்படத்தை சேகரிப்பது மூலம் நிறைவேற்றியுள்ளார். இவர் இதுவரை 500கும் மேற்பட்ட பல வகையான, வெவ்வேறு வகையான கைக் கடிகாரத்தின் புகைப்படங்களை சேகரித்துள்ளார்.

இவரின் திறமையை பாராட்டும வகையில் இன்று(15/08/2018) அவருடைய பள்ளி வளாகத்தில் நடைபெற்ற 72வது சுதந்திர தின விழாவில் “MUGAVAI RECORDS” மற்றும் “WILL MEDALS NATIONAL RECORDS”,  வில் மெடல்ஸ் நிறுவனம் சார்பாக அவருடைய சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவரை வாழ்த்துவதில் கீழை நியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சியடைகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

2 thoughts on “சாதனைகள் பல விதம்.. கைக்கடிகாரம் புகைப்படங்கள்  சேகரிப்பு அதில் புது விதம்..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!