ஆந்திராவில் விஷவாயு கசிவு!கொத்து கொத்தாக மயங்கி விழும் பரிதாபம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு..
விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில் அதிகாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல். மக்கள் வீதிகளிலும் சாலைகளிலும் கொத்து கொத்தாக மயங்கி விழும் காட்சிகள் மனதை உறைய வைக்கும் விதமாக உள்ளது.
சாலையில் சென்ற பலர் விஷவாயு பாதிப்பால் மயங்கி விழுந்ததால் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
3 கி.மீ தொலைவுக்கு விஷவாயு கசிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
விஷவாயுவை கட்டுப்படுத்தும் பணியில் தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை படையினர் ஈடுபட்டுள்ளனர்.


You must be logged in to post a comment.