திருட வந்த ஓட்டலில் எதுவும் கிடைக்காததால் 20 ரூபாயை வைத்து சென்ற வினோத திருடன்..
தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார்.
ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment.