ஊரடங்கால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு அன்பு அறக்கட்டளை நிவாரணம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் குறவர் இன மக்கள் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவிக்கும் அந்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் ஏற்பாட்டின் பேரில், அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அன்பு அறக்கட்டளையின் நிர்வாகிகளான முனைவர் நடராஜன், கார்த்திக், அன்புராஜா, பிரபு உள்ளிட்டோர் வீடுவீடாக சென்று நிவாரணப் பொருட்களை வழங்கினர். தமிழம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவரும் அன்பு அறக்கட்டளைக்கு உதவு செய்ய விரும்புவோர் 8939667467 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தாங்களும் ஒரு சேவை நிர்வாகியாக பங்கெடுக்கலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!