அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி 3ம் தேதி வரை தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்!- தெற்கு ரயில்வே அறிவிப்பு! 

இந்நிலையில் எழும்பூரில் தொடர்ந்து பணிகள் நடப்பதால், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் பிப்ரவரி மாத தொடக்கம் வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். அதன்படி ரயில் எண் 20636 கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், வரும் பிப்ரவரி 2ம் தேதி வரை தாம்பரத்துடன் நிறுத்தப்படும். அந்த ரயில் தாம்பரத்திற்கு அதிகாலை 5.20 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக ரயில் எண் 20635 சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து வரும் பிப்ரவரி 3ம் தேதி வரை புறப்பட்டு வரும். இந்த ரயில் தாம்பரத்திலிருந்து வழக்கமான நேரமான இரவு 8:20 மணிக்கு புறப்பட்டு தென்மாவட்டங்கள் வழியாக கொல்லம் செல்லும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!