நல்லிருக்கை கிராமத்தில் ரசாயன உரங்கள் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சி 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் பேசுகையில் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை பரிந்துரைபடி உரம் இட வேண்டும் பசுந்தாள் உர பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழுதால் மண் வளம் மேம்படும் என கூறினார். வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் உயிர் உரங்கள் உரங்களை கொண்டு விதை நேர்த்தி செய்வதின் அவசியம் மற்றும் பயன்களை எடுத்துரைத்தார். ரசாயன உரங்களை குறைத்து இயற்கையான முறையில் உரங்களை இட்டு மண் வளத்தை பாதுகாக்கும் வழிமுறைகளை கூறினார். பூச்சியியல்துறை இணை பேராசிரியர் ராம்குமார் பருத்தியில் தாக்கும் பூச்சிகளை எவ்வாறு இயற்கை வழி முறைகளில் கட்டு படுத்தலாம் என விளக்கம் அளித்தார் . வேளாண்மை உதவி இயக்குநர் தர கட்டுப்பாடு நாகராஜன் ஊட்டம்மேற்றிய தொழு உரம் தயாரித்தல் குறித்து சாகுபடிக்கு முன்னதாக ஒரு ஏக்கருக்கு 300 கிலோ மக்கிய தொழு உரத்துடன் சூப்பர் பாஸ்பேட் உரத்தை கலந்து அடியுரமாக இடுவதால் மணிச்சத்தின் பயன்பாடு அதிகரிக்கிறது என கூறினார். வேளாண்மை உதவி இயக்குநர் செல்வம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிர் விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விநியோகம் செய்ய இருப்பதால் விவசாயிகள் பயன்னடையும்மாறு கேட்டு கொண்டார். பயிற்சிகான ஏற்பாடுகளை. துணை வேளாண்மை அலுவலர் ச. செய்யது முஸ்தபா. உதவி வேளாண்மை அலுவலர் பழனி ஏற்பாடுகளை செய்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!