ராமநாதபுரம் மாவட்டம் தனியார் மஹாலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியில் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒருங்கிணைந்த மாவட்ட கழக சார்பில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறப்பு அழைபாளாக கலந்து கொண்டு பேசுகையில் : அனைவரும் சமமாக மதிக்க கூடிய கட்சி நமது கட்சி என்றும் . பாராளுமன்ற கூட்டணி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூட்டணி இல்லாவிட்டாலும் தனித்து போட்டியிட தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து கூக்கர் சின்னத்தை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்றும் பல ஆண்டு காலம் ஆட்சி செய்யும் கட்சிக்கு இணையாக அம்முக செயல்பட்டு வருகிறது என்றும் எம்ஜிஆர் போல் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியாக மாற்றுவோம் என்றும் திமுக ஆட்சியில் மின் கட்டண விலை உயர்வு பால் விலை உயர்வு சிறு தொழில் வியாபாரிகள் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர் பழனிச்சாமியின் நடவடிக்கையால் மக்கள் வெறுப்பில் திமுக ஆட்சிக்கு வந்தது அதை உணர்ந்து திமுக செயல்பட தவறிவிட்டது மக்கள் விரைவில் திமுகவை தூக்கி எறிவார்கள் என்றும் தெரிவித்தார். ஆண்ட கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் அமமுக தான் மாற்றுக் கட்சி என்பதை மக்கள் உணர்ந்து வாக்களிப்பார்கள் என்று கூறினார். இக்கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் உள்ள அமமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..








Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









