இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி (தனி) சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான அமமுக., செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் பார்த்திபனூரில் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் வ.து.ஆனந்த் பேசியதாவது: 2019 லோக் சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும். தகுதி வாய்ந்த தலைவராக டிடிவி தினகரனை தமிழக இளைஞர்கள் நினைக்கின்றனர். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அனைத்திலும் அமமுக வெற்றி பெறும்.
அதிமுக கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களின் பிரமான பத்திரம் தாக்கல் செய்த அடிப்படையில் அமமுக விற்கு சாதகமான தீர்ப்பு விரைவில் வரும். அதன் பின்னர் அனைவரும் அமமுகவில் இணைவர் .கஜா புயல் பாதித்தோருக்கு துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் ஆறுதல் கூறி உதவி செய்துள்ளார். இதனால் அவர் மீது தமிழக மக்களின் நன்மதிப்பு அதிகரித்துள்ளது.அமமுக விலிருந்து பிற கட்சிக்கு யார் சென்றாலும் வருத்தமில்லை என பேசினார்.
மாநில அமைப்பு செயலாளர் முனியசாமி. மாநில மருத்துவர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் முத்தையா, மாநில மகளிரணி துணை செயலாளர் கவிதா சசிகுமார், முதுகுளத்தூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ முருகன், பரமக்குடி ஒன்றிய பொறுப்பாளர் சுப்பிரமணியன். உள்பட பலர் பங்கேற்றனர்.
செய்திகள்:- முருகன், இராமநாதபுரம்.


You must be logged in to post a comment.