இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அமமுக நகர் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் தலைமையில் , மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த், மாநில அமைப்பு செயலாளர் ஜி.முனியசாமி,மாநில மகளிரணி இணைச்செயலாளர் கவிதா,மண்டப ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் (எ) ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலையில் பல அரசியல் கட்சிகளில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். இவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வரவேற்றனர்.
பரபரப்பான இந்த அரசியல் சூழலில் புதிதாக தொடங்கப்பட்ட அம்மா முன்னேற்ற கழகத்தில் பல அரசியல் கட்சியில் இருந்து இணைவது, அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
அதே போல் இன்று நடந்த மற்றொரு நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர் செயலாளர் கே.ஆர்.சுரேஷ் தலைமையில் 50 மேற்ப்பட்டோர் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பொன்னாடை போர்த்தி கட்சியில் இனணந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print


















