இராமநாதபுரத்தில் அம்மா மக்கள்முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மை அணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி இன்று (11/06/2018) நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிர கணக்கான கட்சியினர் மற்றும் பொது மக்கள் திரளாக பங்கேற்றனர்.
தமிழகம் முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இஸ்லாமியர்களுடன் இணைந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்தி அதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று சிறப்பிக்க அக்கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மை அணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி இராமநாதபுரம் பட்டணம்காத்தான் கிங்ஸ் திருமண மகாலில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் ஜனாப் ஆர்.கே.ரம்லி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பங்கேற்று இப்தார் நோன்பு திறந்து இஸ்லாமியர்கள் அருந்தும் நோன்பு கஞ்சியை அருந்தினார். முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், டாக்டர் முத்தையா, முன்னாள் வாரியத்தலைவர் முனியசாமி, மாவட்ட செயலாளர் வ.து.ஆனந்த், ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் ஜெயசந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாநில மகளிரணி செயலாளர் கவிதா, தவமுனியசாமி, செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஊடகத்துறையினர் மீது போடப்படும் வழக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது. இதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













