மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் முருகன் கோவில் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் டேவிட் அண்ணாதுரை பேசும்போது எப்போதெல்லாம் திமுக அரசு மத்தியில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாடுக்கு தீங்கு ஏற்படுவதாகவும்,இதனால் தமிழக மக்கள் மிகவும் வேதனை அடைந்து வருவதாகவும், இதனை அகற்ற வேண்டிய பொருப்பு அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கு உண்டு என்பதால் அண்ணன் டிடிவி கரங்களை வலுப்படுத்தி திமுகவை அகற்றுவோம் என தெரிவித்தார்.

You must be logged in to post a comment.