கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை தெற்கு மல்லல் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்…

கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை பிர்க்கா மல்லல் குருப் தெற்கு மல்லல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கூடத்தில் கீழக்கரை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா தலைமையிலும், வட்ட வழங்கல் அலுவலர் உமாராணி, மண்டல துணை தாசில்தார் பெனித்குமார் முன்னிலையிலும் இன்று (31-03-17) அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு பயனாளிகளுக்கு ஈமக்கிரியை செய்வதற்கான உதவித் தொகைகக்கான காசோலைகளும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3 (மூன்று) பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான உத்தரவுகளும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 33 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது

இம்முகாமில் திருஉத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர். கோகிலா, கிராம நிர்வாக அலுவலர். பூபதி, தெற்கு மல்லல் கிராமத் தலைவர் தலைவர். இராமசாமி உட்பட கிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து வசதி இல்லாத அடிப்படை வசதிகளில் தன்னிறைவு பெறாத தெற்குமல்லல் கிராமத்தை தேர்ந்தெடுத்து மக்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் வகையில் அம்மா திட்டம் தந்த தமிழக அரசுக்கும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் பொது மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]

One thought on “கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை தெற்கு மல்லல் கிராமத்தில் அம்மா திட்ட முகாம்…

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!