சென்னையில் ”AMD LAW ASSOCIATES” வழக்கறிஞர் அலுவலகம் திறப்பு விழா – அனைவருக்கும் அழைப்பு…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த, சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன், ஜெ. அஸ்வின் ராஜ், சுல்தான் முகைதீன் ஆகியோர்களின் ”AMD LAW ASSOCIATES” புதிய வழக்கறிஞர் அலுவலகம், எதிர்வரும் 31.12.2020, வியாழக்கிழமை அன்று, காலை 10 மணியளவில் சென்னை மண்ணடியில் திறக்கப்பட இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர். வழக்கறிஞர் P.S.அமல்ராஜ் அவர்கள், சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் P.ஜார்ஜ் சுந்தரம் அவர்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர், சென்னை காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஹாஜா கனி (ஆரூர் புதியவன்),

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர், நாகை சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி, சமூக சேவகர், தீ.க.பட்டு ஊராட்சி தலைவர் ஜெ.டேவிட்சன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக் குழு உறுப்பினர், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் துரை சந்திரசேகர் ஆகியோர்கள் கலந்து கொண்டு, புதிய வழக்கறிஞர் அலுவலக விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.

இந்த வழக்கறிஞர் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தந்து வாழ்த்துமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!