ஆம்பூரில் 2-ம் வகுப்பு மாணவி ஆட்டோவிலிருந்து விழுந்து உயிரிழப்பு : உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகை

ஆம்பூரில் இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து உயிர் இழப்பும் மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மல்லிகை தோப்பு பகுதியில் வசித்து வருபவர் முத்து இவரது மகள் திவ்யகரசி மற்றும் லோகேஷ் தினந்தோறும் ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு அவரது தாய் பத்மா மல்லிகை தோப்பு பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் மகன் மற்றும் மகளை பள்ளிக்கு அனுப்பி உள்ளார் பின்னர் ஆட்டோ மல்லிகை தோப்பு பகுதியில் இருந்து ஆம்பூர் நாகேஸ்வரன் கோயில் பகுதியில் அமைந்துள்ள இந்து ஆரம்பப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு சென்றபோது அதே பகுதியில் ஆட்டோவில் இருந்து மாணவி திடீரென தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி உள்ளார் அவரை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு போது மருத்துவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர் தொடர்ந்து தற்போது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!