சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. சேர்ந்தமரம் பகுதியை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு மருத்துவ தேவைக்கு செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் ஏற்படும் தினசரி விபத்துக்கள் மற்றும் அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் அரசு மருத்துவமனையை தேடி செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில், முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தென்காசி அல்லது திருநெல்வேலி போன்ற மருத்துவ மனைகளில் சேர்ப்பதற்கு 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்


You must be logged in to post a comment.