தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள்!- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் பகுதிகளில் மட்டும் 5,556 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன.இதுவரை சுமார் 62,000-க்கு மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் இசிஜி, எக்ஸ்ரே போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது . இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் டிசம்பர் இறுதி மட்டுமல்லாமல் தேவைக்கு ஏற்ப ஜனவரி மாதமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. .

திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு எவ்வளவு நபர்கள் வருவார்கள் என்பது குறித்து அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு மருத்துவ சிறப்பு முகாம்கள் அமைக்க உள்ளோம். கடந்த ஆண்டைவிட இந்த முறை கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்க உள்ளோம். என தெரிவித்தார் .

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!