கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த அணியாகும் அல் ஜதீத் வாலிபால் கிளப். இந்த கிளப்பின் அணி உள்ளூர் மற்றும் வெளியூரில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளனர்.

இந்த வாரம் இராமேஸ்வரம் SRM VOLLEYBALL TOURNAMENT நடைபெற்றது. இந்த போட்டியில் அல் ஜதீத் வாலிபால் கிளப் முதல் பரிசை வென்றுள்ளது. அடுத்ததாக இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசினை முகம்மது பாய்ஸ் கிளப், ஒப்பிலான் மற்றும் CVC கிளப், கீழக்கரை முறையே வென்றுள்ளனர்.


வெற்றி பெற்ற அணியினருக்கு கீழை நியூஸ் நிர்வாகக்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


இன்ஷா அல்லாஹ் இதோடு நின்று விடாமல் தேசிய அளவில் நம் பிள்ளைகள் சாதிக்க என்ன வழிமுறை உண்டோ அதனை அறிந்து அவர்களை ஊக்குவித்து இன்னும் தேசிய அளவில் சாதிக்க உறுதுணையாக இருக்க வேண்டும்.இளைஞர்களும் இதனை லட்சியமாக கொண்டு முன்னேற வேண்டும்.