அமெரிக்க வானியலார் ஆல்ட்டன் ஆர்ப் பிறந்தநாள் இன்று (மார்ச் 21, 1927)

ஆல்ட்டன் கிறித்தியன் சிப் ஆர்ப் (Halton Christian Chip Arp) மார்ச் 21, 1927ல் நியூயார்க் நகரில் பிறந்தார். அவர் மும்முறை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு நான்கு பெண்களும் ஐந்து பேரர்களும் உண்டு. அவருக்கு ஆர்வார்டு கல்லூரி இளநிலைப் பட்டத்தை 1949ல் வழங்கியது. அவருக்கு முனைவர் பட்டத்தை 1953ல் கால்டெக் வழங்கியது. பிறகு அவர் வாசிங்டன் கார்நிகி நிறுவனத்தில் 1953ல் ஆய்வாளராகச் சேர்ந்தார். அப்போது அவர் தனது ஆய்வை மவுண்ட் வில்சன் வான்காணகத்திலும், பலோமார் வான்காணகத்திலும் மேற்கொண்டார். ஆர்ப் 1955ல் இந்தியானா பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளரானார். பிறகு 1957ல் பலோமார் வான்காணகத்தில் ஆசிரியராகி அங்கு 29 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1983ல் ஜெர்மனி மேக்சு பிளாங்க் வானியற்பியல் கழகத்தில் ஆசிரியரானார்.

ஆர்ப் விந்தைப் பால்வெளிகளின் வான்வரை என்ற இயல்பிகந்த பால்வெளிகளின் அட்டவணையைத் தொகுத்தார். அது 1966ல் முதன்முதலில் வெளியிடப்பட்டது. காலத்தைப் பொறுத்து பால்வெளிகள் எப்படி மாறுகின்றன என்பதை வானியலார் எவருமே புரிந்து கொள்ளவில்லை, எனவுணர்ந்த ஆர்ப் அந்தத் திட்டத்தில் பணிபுரியலானார். பால்வெளி வான்வரை பால்வெளிகளின் படிமலர்ச்சியை ஆய்வு செய்வதற்கான படங்களைத் தரவல்லது. ஆர்ப் பிறகு இவ்வான்வரையைத் தனது பகுதி உடுக்கணப் பொருட்களின் (QSOs) விவாதத்துக்கானச் சான்றாகப் பயன்படுத்தினார்.

ஆர்ப் அவரது கோட்பாடுகளை 1960களில் முன்மொழிந்தார். இந்த கருவிகள் பகுதி உடுக்கணப் பொருள்களை (QSO) மேலும் நுட்பமாக ஆய்வு செய்யப் பயன்படுத்தப்பட்டன. உயர் செம்பெயர்ச்சி உள்ள நெடுந்தொலைவுப் பால்வெளிகளே பகுதி உடுக்கணப் பொருள்கள் (QSO) என இன்று பொதுவாக ஏற்கப்பட்டுவிட்டது. பல வான் அளக்கைப் படிமங்கள் வழியாக, குறிப்பாக அபிள் ஆழ்புல ஆய்வுகள் வழியாக உயர் செம்பெயர்ச்சிப் பொருள்கள் பகுதி உடுக்கணப் பொருள்கள் (QSO) அல்லவெனவும் அவை மிக அருகில் உள்ள இயல்பான பால்வெளிகளை ஒத்த பால்வெளிகளே எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.எக்சு-கதிரில் இருந்து கதிர்வீச்சு அலைநீளங்கள் வரையிலான கதிர்நிரல் ஆய்வில் கண்டுள்ளபடி, உயர் செம்பெயர்ச்சி பால்வெளிகளின் கதிர்நிரல்கள் அருகில் உள்ள பால்வெளிகளின் கதிர்நிரல்களுடன் பொருந்திவிடுகின்றன. குறிப்பாக உயர்மட்ட விண்மீன்கள் உருவாக்கம் உள்ளவற்றுடன் மட்டுமன்றி விண்மீன் உருவாக்கம் முடிந்தவற்றுடனும் செம்பெயர்ச்சி விளைவுகளுக்குத் திருத்தம் செய்த பிறகு ஒன்றிப் போகின்றன.

அண்டவியற்சாராத அலைவுநேரச் செம்பெயர்ச்சி உள்ள செலூக்கப் பால்வெளிகளில் இருந்தே குவாசர்களும் பொருள்களும் வீசியெறியப்படுகின்றன என்ற கருதுகோளை நிறுவ சுலோன் கணினி வான் அளக்கையிலிருந்தும் QSO செம்பெயர்ச்சியில் இருந்தும் அனைவருக்கும் கிடைக்கும் தரவுகளே போதுமானவை, இருவேறுபட்ட இயல்பார்ந்த செம்பெயர்ச்சிப் படிமங்களை ஆய்வு செய்ததில் முற்கணித்த அலைவெண் வேறெந்த அலைவெண்ணிலுமோ அலைவுநேரத் தன்மை நிலவுவதற்கானச் சான்றேதும் கிடைக்கவில்லை.ஆர்ப் தனது வெரு வெடிப்புக் கோட்பாட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவேயில்லை. 2010ம் ஆண்டு இறப்புவரை, அதற்கெதிராக ஜியோஃபிரிபுர்பிட்ஜ், மார்கரெட் பர்பிட்ஜ் இருவருடனும் ஒருங்கிணைந்து மக்களுக்கானதும் அறிவியல் வெளியீட்டுக்கானதுமான கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தார்.

அமெரிக்க வானியல் கழகத்தால், ஒவ்வோராண்டும் கடந்த ஐந்தாண்டுகளில் நோக்கீட்டு அல்லது கோட்பாட்டு வானியலில் நிகழ்த்திய சாதனைக்காகத் தரப்படும் வானியலுக்கான எலன் பி. வார்னரின் பரிசு 1960ல் ஆர்ப்புக்கு வழங்கப்பட்டது.இதே ஆண்டில், ஆர்ப், “பால்வெளிகளின் விண்மீன் உள்ளடக்கம்” உரைக்காக, நியூகோம்ப் கிளீவ்லாந்து விருதைப் பெற்றார். இது அமெரிக்க வானியல் கழகமும் AAAAS பிரிவு-D யும் இருந்த கூட்டமர்வில் படிக்கப்பட்டது.1984ல் அம்போல்ட் பரிசைப் பெற்றார்.ஆல்ட்டன் ஆர்ப் ஜெர்மனி, மியூனிக்கில் டிசம்பர் 28, 2013ல் இவ்வுலகை விட்டு பிரிந்தார் .

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!