மாணவர்களின் சமுதாய சிந்தனைகளை ஊக்குவிப்பதில் முன்னோடியாக திகழும் “அல் பையினா” பள்ளி..

கல்வி என்பது ஏட்டளிவில் கற்பது மட்டுமல்ல, ஆனால் சமுதாய சிந்தனையுடன், நற்பண்புகளையும் வளர்ப்பது ஆகும்.  அதில் கீழக்கரை அல் பையினா பள்ளி, அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இது போன்ற செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.  இப்பள்ளியில் வருடம்தோறும் மாணவர்களின் சமுதாய பங்களிப்பை ஊக்குவிக்கும் வண்ணம் “CHARITY DAY” எனும் நிகழ்வு நடத்துவது வழக்கம். இந்த நிகழ்வின் நோக்கம் மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி, அவர்களின் சேமிப்பு மூலமாக, மாணவர்கள் மூலமாகவே சமுதாய பணிகளில் ஈடுபடுத்த வைப்பது.

அதன் வரிசையில் அந்த வருடம். மாணவர்கள் மூலம் ₹.1,16,000/- சேமிக்கப்பட்டு கீழக்கரை முள்ளுவாடியில் உள்ள ஒரு மார்க்க பள்ளிக்கு அரிசி மூடைகள், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள், வாலிநோக்கத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு தேவையான வசதிகள் மற்றும் மராமத்து வேலைகளை மாணவர்களே முன்னின்று செய்தனர்.

அதே போல் மாணவர்கள் பணிக்கு சென்ற நேரத்தில் தொழுகை நேரம் கடந்து விட்டதால் மாணவர்களே முன்னின்று தொழுகையை நடத்தியது அனைவரையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.  இதற்கு முக்கிய காரணம் இப்பள்ளியில் DAWA CLUB என்ற அமைப்பு மூலம் மூத்த மாணவர்கள், இளைய மாணவர்களுக்கு மார்க்கம் மற்றும் சமுதாய விசயங்களை பயிற்றுவிப்பதாகும்.

இப்பள்ளி மாணவர்களின் சமுதாய சிந்தனை மென் மேலும் வளர கீழை நியூஸ் நிர்வாகமும் வாழ்த்துகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!