கீழக்கரை அல் பைய்யினா மெட்ரிக் பள்ளியில் பெற்றோர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்..

கீழக்கரை அல் பைய்யினா மெட்ரிக் பள்ளியில் வருகின்ற 21/10/17 அன்று மாலை 6.00 மணிக்கு “பெற்றோர்களுக்கான கவுன்சிலிங் மற்றும் கலந்துரையாடல் ” சிறப்பு பயிலரங்கம் நடைபெற உள்ளது.  இந்த கருத்தரங்கில் கீழ்கண்ட விசயம் கணினி ( POWER POINT PRESENTATIONS)  உதவியுடன் நவீன முறையில் விளக்கப்பட உள்ளது

  • கருவுற்ற தாய்மார்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
  • சேட்டை செய்யும் குழந்தைகளை கையாளும் முறைகள்.
  • பிள்ளைகளை படிப்பதற்கு ஆர்வமூடுத்தல்.
  • நல்ல விஷயங்களை சொல்லி கொடுக்கும் முறைகள்.
  • உங்கள் பிள்ளைகளை சிறந்த முறையில் வளர்க்க தேவையான வழிகாட்டுதல்கள்.

இந்த கருத்தரங்கம் இன்றைய கால்கட்டத்தில் பெற்றோர்களுக்கு அவசியமான வலியூட்டல்களை உள்ளடக்கிய கருத்தரங்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நிகழ்வில் கீழக்கரை பெற்றோர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் இந்நிகழ்ச்சி இத்துறையில் வல்லுனர்களைக் கொண்ட “அக்ஸஸ் இந்தியா” நிறுவனத்துடன் இணைந்து நடத்துவது குறிப்பிடத்தக்கது.

பின்குறிப்பு:- மகரிப் தொழுகைக்கு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பெண்கள் உளூ செய்துவிட்டு தொழுகைக்கு பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

One thought on “கீழக்கரை அல் பைய்யினா மெட்ரிக் பள்ளியில் பெற்றோர்களுக்கான சிறப்பு கருத்தரங்கம்..

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!