தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட 16 கிராம ஊராட்சிகளுக்கு சுகாதார பணிகள் சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக மின்கல வாகனங்கள் வழங்கும் விழா ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண ராமசுப்பிர மணியன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் கலந்து கொண்டு மின் கலம் மூலம் இயங்கும் தூய்மைப் பணி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



விழாவில், கடங்கனேரி, காவலா குறிச்சி, மாயமான் குறிச்சி, நல்லூர், குத்த பாஞ்சான் உட்பட 16 கிராம ஊராட்சிகளுக்கு ரூ. 1,22,50,0000 மதிப்பீட்டில் 49 மின்கலம் மூலம் இயங்கும் தூய்மைப் பணி வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், ஆலங்குளம் தாசில்தார் ஓசனா பெர்னாண்டோ, ஊராட்சி மன்றத் தலைவர்கள் புதுப்பட்டி பால்விநாயகம், நல்லூர் சிம்சன், மருதம்புத்தூர் பூசத்துரை, மாயமான் குறிச்சி பால்தாய், குத்த பாஞ்சான் ஜெயராணி குமார், காவலாக் குறிச்சி மாலதி சுரேஷ், மாறாந்தை மீனா சுப்பிரமணியன், கடங்கநேரி அமுதா தன்ராஜ், ஊத்து மலை துணைத் தலைவர் பிச்சம்மாள் முத்தரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.