எஸ்.ஆலங்குளம் ஆலியார் தர்ஹா சந்தனக்கூடு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே எஸ்.ஆலங்குளத்தில் அடக்க ஸ்தலமாக இருக்கும் ஆலியார் தர்காவின் 10வது ஆண்டு உற்சவ விழா மற்றும் முதலாம் ஆண்டு சந்தனக்கூடு    திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. விழாவை முன்னிட்டு கிடா சண்டை, மாட்டு வண்டி பந்தயம் போன்ற விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த தர்ஹாவில் வேண்டுதலினால் பல பிரச்சினைகள் தீரும் என்ற நம்பிக்கையில் இங்கு ஏராளமானோர் வருகின்றனர்.

இந்த விழாவை முன்னிட்டு கிடா சண்டை போட்டி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 46 ஜோடி கிடாக்கள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற கிடாக்களின் உரிமையாளர்களுக்கு எல்இடி டிவி, காஸ் அடுப்பு போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாட்டு வண்டி பந்தயமும் நடத்தப்பட்டன. ஆயிரகணக்கான பக்தர்கள் தர்காவின் உற்சவ விழா மற்றும் சந்தனக்கூடு   விழாவில் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு கிடா வெட்டி விருந்து அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் அயில்வேலன், கமலநாதன், லிங்கநாதன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். கடலாடி போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!