ஆலங்குளத்தில் காவல் துறை பொது மக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்; பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கல்..

ஆலங்குளத்தில் காவல் துறை பொது மக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

ஆலங்குளத்தில் காவல் துறை பொது மக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் சார்பில் நல்லுறவு கபடி விளையாட்டு போட்டி ஆலங்குளம் காவல் நிலையம் அருகே உள்ள முத்தாரம்மன் கோவில் திடலிலும், நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் போட்டியும், ஆலடிப்பட்டியில் வாலிபால் போட்டியும் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் இறுதி சுற்று கபடி போட்டி மணிமுத்தாறு 12 வது பெட்டாலியன் காவலர்கள் அணியும், பூவனூர் உதயம் அணியினர் இடையே நடைபெற்றது. கபடி விளையாட்டு இறுதி சுற்று போட்டியினை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் மணிமுத்தாறு காவலர் அணியினர் முதல் பரிசும், பூவனூர் அணியினர்; 2 வது பரிசும், செட்டியூர் பாரதி அணியினர் 3 வது பரிசும் பெற்றனர். கிரிக்கெட் போட்டியில் மடத்தூர் அணியினர் முதல் பரிசும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக காவலர்கள் அணியினர் இரண்டாவது பரிசும், ஆலங்குளம் உட்கோட்ட காவலர்கள் அணியினர் 3 வது பரிசும் பெற்றனர். வாலிபால் போட்டியில் கன்னியாகுமரி அணியினர் முதல் பரிசும், தென்காசி மாவட்ட எஸ்.பி அலுவலக காவலர் அணியினர் 2 வது பரிசும், ஆலடிப்பட்டி அணியினர் 3 வது பரிசும், ஆலங்குளம் உட்கோட்ட காவலர்கள் அணியினர் 4 வது பரிசும் பெற்றனர்.

ஆலங்குளம் காவல் நிலையம் அருகே நடைபெற்ற பெண்களுக்கான கபடி போட்டியில் 6 மகளிர் அணியினர் பங்கேற்றனர். இதில் இறுதி சுற்று போட்டியில் ரெட்டியார்பட்டி ஜி ஸ்போர்ட்ஸ் அணியினர் முதல் பரிசும், காளத்திமடம் தென்றல் கபடி அணியினர் 2 வது பரிசும் பெற்றனர். கபடி, கிரிக்கெட் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். பரிசளிப்பு விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் பேசுகையில், போலீஸ் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காக இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதாக கூறினார்.

பரிசளிப்பு விழாவிற்கு ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ரமேஷ், தெய்வம், தன்ராஜ், கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலங்குளம் காவல் நிலையம் ஆய்வாளர் சாகுல் ஹமீது வரவேற்றார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள் தெட்சமணமாற நாடார் சங்கம் தலைவர் ஆர்.கே. காளிதாசன், நெல்லை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, எம்.எஸ்.காமராஜ், செல்வராணி ஜவுளி ஸ்டோர் அதிபர் பிரின்ஸ் தங்கம், ஜே.கே. மால் ஜான்ரவி, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஜி.எஸ். அன் கோ பிரான்சிஸ், டாக்டர் புஷ்பலதா ஜான், டாக்டர் ரமேஷ், கோல்டன் செல்வராஜ், ரோட்டரி சங்கம் தலைவர் எஸ்.எம்.வி. மயில்ராஜன், வக்கீல் நெல்சன், நகர வியாபாரிகள் சங்கம் முத்துவேல், குழந்தைவேல், முத்துராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குளம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ், ஆய்வாளர் சாகுல் ஹமீது மற்றும் ஆலங்குளம் உட்கோட்ட காவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

Abubakker Sithik

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!