உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்ஐகாக இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்த பணிகள் ஆரம்பமாகி விட்டன. வாடிவாசல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து முகூர்த்த கால் நடப்பட்டது. முகூர்த்த கால் நடும் விழாவில் அமைச்சர்கள் ஆட்சியாளர்கள் கலந்து கொண்டனர். உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி, மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில், விழாக்குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் துரிதமாக நடக்கின்றன.இந்த ஆண்டு தைப்பொங்கல் நாளான 15ஆம் தேதி அவனியாபுரம், 16ஆம் தேதி பாலமேடு, 17ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது கேலரி அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகின்றனர். அதிக காளைகளை அடங்கி ஜல்லிக்கட்டில் முதலிடம் பெறும் வீரருக்கு கார் பரிசளிக்கப்படும்.ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு, கால்நடைத்துறையினர் உடல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். மாடுபிடி வீரர்களும் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்..
செய்தியாளர், வி. காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









