உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில், காளைகள் சீறிப்பாய்ந்தன: அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக அளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை துவங்கியது பல்வேறு காளைகள் சீறிப்பாய்ந்தன மாடுபிடி வீரர்கள் பலர் காலையில் அடக்கி தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் பரிசுகளை பெற்றனர்.
அமைச்சர்கள் பி. மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், கால்நடைத்துறை அரசு கூடுதல் செயலர் மங்கத் சர்மா, ஆட்சியர் சங்கீதா, சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, தமிழரசி, வெங்கடேசன், புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல்வேறு காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
காளைகள் சீறிப்பாய்ந்தில், பலர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை, தென் மண்டல காவல்துறைத் தலைவர் நரேந்திரன் நாயர், டிஐஜி, மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. தலைமையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.