விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரம்..

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரம்..

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக கருதக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தை ஒன்றாம் தேதி ஜனவரி-15 அன்று நடைபெறுவது வழக்கம். முதல் ஜல்லிக்கட்டு போட்டிகளான அவனியாபுரம் அதனை தொடர்ந்து பாலமேடு, அலங்காநல்லூர் என அடுத்தடுத்து நடைபெறுகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்த நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்., கடந்த எட்டாம் தேதி மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டு பந்தக்கல் நடப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் நடைபெற்றது. ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் பணிகள் தற்போது 80 சதவீதம் முடிவடைந்துள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் விழா மேடை பார்வையாளர் மேடை மற்றும் செய்தியாளர் மேடை சிசிடிவி கேமரா பொருத்தும் பணி போன்றவற்றை மதுரை மாநகராட்சி நகர்ப்புற வளர்ச்சி திட்டமிடல் செயற்பொறியாளர் மாலதி ஆய்வு செய்தார்.

தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும், பணி பரிசு பொருட்கள் வைக்கும் இடம், சிறப்பு விருந்தினர்கள் மேடை பார்வையாளர் மேடை, வீரர்கள் பரிசோதனை செய்யும் இடம், காளைகளை பரிசோதனை செய்யும் இடம், காளைகளை அழைத்து வரும் இடம் மாடுகள் சேகரிக்கும் இடம் என அனைத்து இடங்களிலும் தற்போது கம்பு கட்டும் பணிகள் இன்று மாலைக்குள் முடிவு பெறும்.

மேலும் மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகராட்சி நிர்வாகம் ஏற்று நடத்துவதால் ஜல்லிக்கட்டு போட்டிகளை பதிவு செய்ய ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. நடமாடும் கழிப்பறை, குடிநீர் தொட்டிகள், எல் இ டி திரையரங்குகள் என அனைத்து வசதிகளும் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்குவதற்காக பேரிக்காடு அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுவரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கு 2400 காளைகள் முன்பதிவு செய்துள்ளனர். 1318 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ப முன்பதிவு செய்துள்ளனர்.

தற்போது ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்த ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் தேர்வுக்காக தற்போது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு களம் காத்திருக்கிறது..செய்தியாளர் வி காளமேகம்

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!