கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற கலை நிகழ்ச்சிப் போட்டிகளில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 02.02.2019 மற்றும் 03.02.2019 தினங்களில் நடைபெற்ற “அழகு ஆரம் – 2019” கலை நிகழ்ச்சிப் போட்டிகளில் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டு மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனர்.
இக்கலை நிகழ்ச்சி போட்டிகளில் நாடகப் போட்டி மற்றும் கோலப் போட்டி இரண்டிலும் முதலிடமும், மௌன நாடகப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி இரண்டிலும் இரண்டாமிடமும் பெற்று சாதனை படைத்தனர். இதில் பல்வேறு உறுப்புக்கல்லூரிகளிலிருந்தும் பல்வேறு மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இக்கலை நிகழ்ச்சிக்காக மாணவ மாணவியர்களை தமிழ்த்துறைத்தலைவர் திரு.P.பாலமுருகன் அவர்கள் தயார் செய்திருந்தார்.
இச்சாதனைக்கு இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் முஹம்மது யூசுப், செயலர் சர்மிளா, இயக்குநர்கள், முதல்வர் ரஜபுதீன், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









