புதிய கீழ்மட்டத்தொட்டி அமைத்திட ஆலங்குளம் போதிசேவா சங்கத்தால் எடுக்கப்பட்ட முயற்சிக்கு வெற்றி

ஆலங்குளம் போதி சேவா சங்கம் சார்பில் க.கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாவது – நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சியில் கீழ் மட்ட தொட்டி கட்டுவதற்கு 2 ஆண்டு காலமாக போதி சேவா சங்கம் சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஆலங்குளம் போதி சேவா சங்கம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை மூலம் அதிகாரிகளை களத்தில் ஆய்வு செய்ய வைத்தது.இப்பகுதி MLA-வும் களத்தில் ஆய்வு செய்து கிடப்பில் இரண்டு ஆண்டுக்கு முன் போடப்பட்ட டெண்டரை நடை முறை படுத்தி ரூ2,83,000 ஒதுக்கிடு செய்து பாப்பாக்குடி ஒன்றிய நிதியில் கீழ் மட்ட தொட்டி கட்டுவதற்கு முயற்சி எடுத்துள்ளார்.

இந்நிலையில் தொட்டி கட்டுவதற்கு ஆர்டர் வந்து ஒப்பந்தகாரர் மூலம் பாழடைந்த தொட்டியினை இடித்துவிட்டு பின் புதிய தொட்டியினை கட்டும் பணியும் நடைபெற்றுள்ளதாகவும் போதிசேவா சங்கம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் 2 ஆண்டுகளாக இந்த கீழ் மட்ட தொட்டி கட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் ஒன்றும் அறியாத மக்களை மனு ஒன்று தயார் செய்ய வைத்து,போலியாக ஒப்பம் பெறப்பட்டு பின் கீழ் மட்ட தொட்டியை இடிக்க ரூ,6000 செலவு என கூறி ஓட்டு வாங்குவதற்கு அரசியல் ஆதாயம் தேடப்படும் நிலை உள்ளது.மேலும் இதற்காக ஒன்றும் அறியா பாமர மக்களிடம் ரூ 100 வசூல் செய்யும் நிலையும் உள்ளதாகவும், பாடுபட்டவன் ஒருவன் பலன் அடைவது ஒருவன் என்ற பழ மொழிக்கேற்ப இந்த செயல்கள் அமைந்துள்ளதாகவும் ஆலங்குளம் போதி சேவா சங்கம் சார்பில் க.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!