20-01-2018 அன்று திருப்பத்தூர் பாபா அமிர் பாதுஷா பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் தமிழக இஸ்லாமிய பள்ளிகள் மேம்பாட்டு (TAMILNAD ISLAMIC SCHOOL WELFARE ASSOCIATION – TISWA) அமைப்பு சார்பாக SPORTANS’18 என்ற பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் பல் வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இராமநாதபுரம் மதுரை திண்டுக்கல் திருநெல்வேலி புதுக்கோட்டை கரூர் சிவகங்கை போன்ற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 25 பள்ளிகளின் சார்பாக 750க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கீழக்கரை அல் பையினா பள்ளி மொத்தம் 10 போட்டிகளில் கலந்து கொண்டு 6 போட்டிகளில் 7 தங்க பதக்கமும் 2 வெள்ளி பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ளனர். அல் பையினா பள்ளி சிறுவர் நிலையிலான மாணவ மாணவிகளுக்கான போட்டிகளில் மட்டுமே கலந்து கொண்டு அந்நிலைக்கான ஒட்டு மொத்த போட்டிகளுக்கான சிறப்பு விருதையும் ( Sub Junior Overall Championship), அல் பையினா பள்ளியைச் சார்ந்த ஹனா ஜமான் ஒட்டு மொத்த தனி மாணவ மாணவிகளுக்கான விருதையும் (Individual Overall championship) வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். போட்டிகளில் வென்றவர்களுக்கான பரிசுகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார். பரிசு பெற்றவர்களின் விபரங்கள்கள் கீழே:-
Golden Medal: 📌Seyed Rabiya(Medicinal Throw) 📌Hana Zaman (Long Jump) 📌Hana Zaman (80 meters) 📌Hana Zaman(Relay) 📌Aysha (Relay) 📌Raza (Relay) 📌Aminath Hasna(Relay)
Silver Medal: 📌Abubaker Laheen (Long jump) 📌Ahamed Azeem( Medicinal throw)மேலும் இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அல் பையினா பள்ளி மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கான அணிவகுப்பை முன்னடத்திச் சென்றது குறிப்பிடதக்கதாககும். அல் பையினா பள்ளியின் தாளாளர் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. அல் பையினா பள்ளி இஸ்லாமிய மார்க்க கல்வியை சிறந்த பயிற்றுவிக்கும் நிறுவனமாக விளங்குவதுடன் இது போன்ற போட்டிகளிலும் மாணவச் செல்வங்களை ஊக்குவித்து முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வது பாராட்டுதலுக்குரிய விசயமாகும்.
புகைப்படத் தொகுப்பு

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print



















