கீழக்கரையில் கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக ஏர்செல் அலைபேசிகள் செயல்பாட்டில் இல்லை. இதற்கு பல விதமான காரணங்கள் பரவி வந்தது, கோபுரங்கள் இடம் மாற்றம், வேறு நிறுவனத்துக்கு விற்கப்பட்டு விட்டது என பல் வகையான யூகங்கள் பரவி வந்தது.
கீழை நியூஸ் சார்பாக விசாரித்த பொழுது வேறு வகையான தகவல்கள் வருகின்றது. ஏர்செல்
நிறுவனம் மின்சார வாரியத்துக்கு பாக்கி தொகை செலுத்த வேண்டிய காரணத்தினால் மின்சார பாதிப்பு ஏற்பட்டு, கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாத சலுகையில் Talk Time மற்றும் Data Package வாங்கியவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான இழப்பீட்டை ஏர்செல் நிர்வாகம் ஏற்குமா?? என்பதே வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாகும்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









