மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் அகில இந்திய விவசாய அணி தமிழ் மாநில குழு மாநாடு நடைபெற்றது.அகில இந்திய பார்வர்டு பிளாக் அகில இந்திய விவசாய அணியின் 10 வது மாநில மாநாட்டில் விவசாய அணி கம்பூர் சேகர் தலைமையில் எம் மலைச்சாமி தேனி ராஜா ஆர். களஞ்சியம் பழனி முருகன் கூடலூர் செந்தில் குமார் எம். சோலை ராஜா முன்னிலையில் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.மாநில பொறுப்பாளர் எவரெஸ்ட் பால்சாமி மாநாட்டு அறிக்கை சமர்ப்பித்தல். மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் மாநில தலைவர் சி. முத்துராமலிங்கம் மாநில நிர்வாகிகள் திருப்பதி பசும்பொன் பாஸ்கர பாண்டியன் பி பி இளையரசு பசும்பொன் ராஜா ஐ ராஜா லட்சுமி மாயாண்டி அசோக் தங்கப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். விவசாயி அணி மாநாட்டில் இரங்கல் தீர்மானம் உள்பட விவசாய அணி சார்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவட்டப்பட்டது. புதிய விவசாய அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மதுரை தேனி திண்டுக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாய அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உசிலம்பட்டி நகர செயலாளர் சபரிராஜா நன்றி கூறினார்.இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி மாநில பொதுச்செயலாளர் கதிரவன் கூறியதாவது :
திருநெல்வேலியில் தனிநபர் (செந்தில்ராஜன்) தேசிய தலைவர் நேதாஜி பற்றியும் தேவர் பற்றியும் பார்வர்ட் பிளாக் கட்சி குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளார்.இவனைப் போன்ற பன்றிகளுக்கெல்லாம் பதில் சொல்வது எங்கள் வேலை இல்லையென்றாலும் தேசிய தலைவர் குறித்து பேசியதால் எளிதாக விட முடியாது.இதனால் அவன் மீது அனைத்து மாவட்ட காவல்நிலையங்களிலும் பார்வர்ட்பிளாக் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.