இன்று (23-11-2017) காலை தமிழக தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணிக்கு என்று தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை கேட்டு சென்னை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மட்ட அதிமுக தொண்டர்களும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கீழக்கரையிலும் அ தி மு க வினர் தேர்தல் கமிஷன் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதை கொண்டாடும் வகையில் கீழக்கரை புரட்சி தலைவி அம்மா பேரவை சார்பில் அம்மா பேரவை செயலாளர் வி வி. சரவணபாலாஜி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
அதேபோல் கீழக்கரையில் உள்ள பல தரப்பட்ட அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.








You must be logged in to post a comment.