சோழவந்தான் ஆகஸ்ட் 18
மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கருப்பையா சுவரொட்டிகள் ஒட்டி மதுரை மாநாட்டிற்கு அதிமுகவினரை அழைத்த வண்ணம் உள்ளார். சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு இடங்களில் அஇஅதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட கழகச் செயலாளர் ஆர்பி உதயகுமார், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய கழகச் செயலாளர்கள், பேரூர் கழகச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோரை பிரசுரித்து அதிமுக கட்சியினரையும் பொதுமக்களையும் வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டி அழைப்பில் ஈடுபட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.