இராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராம மீனவ சமுதாய பள்ளி மாணவர்களுக்கு கடல் பசு விழிப்புணர்வு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கான தேர்வு நடைபெற்றது.
இந்திய வன உயிர் நிறுவனம், வனத்துறை, மீன்வளத்துறை, கடலோரக் காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் மீனவ சமுதாய மக்கள் இணைந்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியில் வசிக்கும் கடல்பசு (ஆவுலியா) உள்ளிட்ட, அரசால் பிடிக்க தடை செய்யப்பட்ட அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கடல்பசு (ஆவுரியா) உதவித்தொகை திட்டம் இந்திய வன உயிரி நிறுவனம் சார்பில் மாதம் ரூ. 500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கான போட்டித் தேர்வை 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 250 பேர் கலந்து கொண்டு எழுதினர். தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் முத்து விஜயா தலைமை வகித்தார். இந்திய வனஉயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் க.மது மகேஷ் வரவேற்றார். மண்டபம் வன சரக அலுவலர் சதீஷ் பேசுகையில், ” கடல்பசு, கடற்குதிரை, கடல் அட்டைகள் உள்பட பல்வேறு அரிய வகை கடல் உயிரினங்களை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. அழிந்து வரும் நிலையில் உள்ள அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், என்றார். கடலோர காவல்துறை ஆய்வாளர் பிலிப் சுரேஷ் பீட்டர் பேசுகையில், கடல் பசுக்களை சட்ட விரோதமாக பிடிப்பவர்கள் மீது வனத்துறை, கடலோர காவல் படை கடும் நடவடிக்கை எடுக்கும்” என்றார். மீன் வளத்துறை உதவி ஆய்வாளர் ஈஸ்வரன், மீனவர் கிராமத்தலைவர்கள் தனராஜ் , இந்திய வனஉயிர் நிறுவனத்தை சேர்ந்த சின்மயா, ரோஸ்மி, சுவேதா, தங்கபாண்டி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 850 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வில் 53 பேர் முதலிடம் பெற்றனர். நடப்பு ஆண்டு 1,500 மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர் இதில் முதலிடம் பிடிக்கும் 100 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது





You must be logged in to post a comment.