அண்ணா பல்கலை மாணவி பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக நீதி கோரி ராமநாதபுரத்தில் தடையை மீறி அதிமுக சார்பில் நேற்று (டிச.30) காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம் ஏ முனியசாமி தலைமை வகித்தார். அதிமுக மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தலைமையில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட இணைச் செயலாளர் கவிதா சசிகுமார், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் நிறைகுலத்தான், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுந்தர பாண்டியன், ஆனி முத்து, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வாரிய முன்னாள் தலைவர் முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஜெயிலானி சீனிக் கட்டி, எம்ஜிஆர் மன்றம் துணைச் செயலாளர்கள் ரத்தினம், வீரபாண்டியன், மாணவரணி துணைச்செயலாளர் செந்தில் குமார், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், துணைச் செயலாளர் அரவிந்த், ராமநாதபுரம் நகர் செயலாளர் பால்பாண்டியன், துணை செயலாளர் ஆரிப் ராஜா, மண்டபம் மேற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் மருதுபாண்டியன், ஜானகி ராமன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் நாகராஜன் ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் நிர்வாகிகள் 15 பேர் உட்பட 240 பேர் கேணிக்கரை போலீசார் வழக்கு செய்தனர்.

You must be logged in to post a comment.