செங்கத்தில் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் என்று கட்சி பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து நடைபெற்று வரும் நிலையில். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அதிமுக ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து 200போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் மகரிஷி மனோகரன் மற்றும் அதிமுகவினர் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்
இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். மேலும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரணமாக நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதி இல்லாமல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்காமல் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைப்பதாகவும், இதற்கு காவல்துறை உடந்தையாக இருந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்
You must be logged in to post a comment.