தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் விவிடி சிக்னல் அருகே நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டசெயலாளர் சி.த.செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சண்முகவேல், கிழக்கு பகுதி செயலாளர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு பகுதி செயலாளர் முருகன் வரவேற்புரையாற்றினார். கழக அமைப்புச் செயலாளர் ஆவின் சேர்மன் என்.சின்னத்துரை, தலைமை கழக பேச்சாளர்கள் அணுகுண்டு பீர் முகம்மது, தீக்கனல் லெட்சுமணன், வக்கீல் யு.எஸ்.சேகர், அனல் ராஐசேகர், முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கட்சியை தோற்றுவித்து உலகத்தில் எந்தத் தலைவரும் ஒரு கட்சி தலைவருடைய படத்தை கொடியில் பதித்தது கிடையாது அப்படி செய்த ஒரே தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டுமே என்றார். எம்ஜிஆர் தனக்கு பிறகு இயக்கத்தை கட்டிக் காக்க அம்மாவை கொண்டு வந்தார்கள் எனக் குறிப்பிட்ட அவர், அம்மா சிறந்த நல்லாட்சியை தந்தார்கள் அவர் கொண்டு வந்த
திட்டங்கள் ஏராளம் என பட்டியலிட்டார். தாய்குலங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கிரைண்டர் மிக்சி மின்விசிறி உள்ளிட்ட பொருள்களை அளித்தவர் அம்மா என்றார். அப்படி அம்மா கொண்டு வந்த திட்டங்களை இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்த அவர், முன்பு 3 லட்சமாக இருந்த காப்பீட்டு திட்டத்தை ஐந்து லட்சமாக உயர்த்தி இருக்கிறார் முதல்வர் என்றார் படிக்கும் குழந்தைகளுக்கு அனைத்து விதமான கல்வி உபகரணங்களையும் முதல்வர் வழங்கி வருவதாக குறிப்பிட்டார் கருணாநிதி என்ன செய்தார் அவர் தனது குடும்பத்தை மட்டுமே வளர்த்தார் எனக் குறிப்பிட்டார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கவே இயங்காது என தெரிவித்த அவர் ஆலையை திறக்க விடமாட்டோம் என்றார். கீதாஜீவன் மூன்று வருடம் எம்எல்ஏவாக இருந்து தூத்துக்குடிக்கு என்ன செய்துள்ளார் என கேள்வி எழுப்பிய அவர் கடந்த அதிமுக ஆட்சியில் தான் அங்கன்வாடி மையங்களில் இருந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வந்ததாக குறிப்பிட்டார். மேலும் மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரே இயக்கம் அதிமுக தான் என்றார்.
இதில் மகளிர் அணி குருத்தாய், அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தளபதி பிச்சையா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இனை செயலாளர் ஜோதிமணி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானராஜ், அம்மா பேரவை இணை செயலாளர் ஜெபசிங், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை, முன்னால் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பிடிஆர்.ராஜகோபால், வக்கீல் ஆண்ட்ரூமணி, 3வது வட்ட செயலாளர் முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தி, ஜெமிலா, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் சங்கர், டெரன்ஸ், அந்தோணி, சுபாண் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தெற்கு பகுதி செயலாளர் பி.என்.ராமகிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









