இராமநாதபுரம், நவ.2 – இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், பரமக்குடி சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான அய்வு கூட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளரும், அதிமுக அமைப்புச் செயலருமான சுதா.கே.பரமசிவம், மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி ஆகியோர் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர்கள் நிறைகுளத்தான், சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலர்கள் காளிமுத்து, முனியசாமி பாண்டியன், கர்ணன், அந்தோணி ராஜ், செந்தில்குமார், கருப்புசாமி, பிரவீன்குமார், ராஜேந்திரன், பேரூர் செயலர்கள் முத்துராமலிங்கம், ஜெயபாண்டியன், சிங்கக்குட்டி மணி முருகன், சார்பு அணி மாவட்ட செயலர்கள் சரவணகுமார், சண்முகபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி சட்டமன்ற தொகுதி அதிமுக பூத் கமிட்டி ஆய்வு கூட்டத்தில் எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் டாக்டர் முத்தையா, மாவட்ட அதிமுக துணைச் செயலர்கள் பாதுஷா, பாலாமணி மாரி, நகர் செயலர்கள் ஜமால், பால்பண்டியன், ஒன்றிய கழக செயலர்கள் முத்தையா, குப்புசாமி, சுப்ரமணியன், பூமிநாதன், சண்முகம், அபிராமம் பேரூர் செயலர் ரமேஷ், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சரவணகுமார், உதுமான் அலி, ராஜாராம் பாண்டியன் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் கலந்து கொண்டனர்.


You must be logged in to post a comment.