ஐக்கிய அரபு அமீரகத்தில் 49 வது தேசிய தினத்தை முன்னிட்டு AG Cars சார்பாக “Ride with Pride” என்ற பதாகை ஏந்திய வாகன அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு மம்ஸாரில் அமைந்துள்ள கார்ஸ் சோதனை நிலையத்தில் இருந்து தொடங்கி ஜுமைராவில் நிறைவடைந்தது.
இதில் அணிவகுப்பில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பங்கு பெற்றது. அந்நிறுவனத்தில் பணி புரியும் பல் வேறு நாட்டை சேர்ந்த பணியாளர்கள், தங்கள் குடும்பங்களோடு கலந்து கொண்டு தேசிய தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இது போன்ற நிகழ்ச்சியில் முன்னேடுத்து செய்வதில் AG cars நிறுவனம் ஒவ்வொரு வருடமும் முன்னோடியாக இருந்து வருவது குறிப்பிடதக்கது.
இந்நிகழ்ச்சியை AG Ventures நிறுவனத்தின் ஆர்துரு -முதன்மை செயல் அதிகாரி, அப்துல் மாலிக்-தலைமை செயல் அதிகாரி-AG Cars மற்றும் முகம்மது மாலிக் தாரிக்- AG Auto ஆகியோர் முன்னின்று இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
இது குறித்து முதன்மை செயல் அதிகாரி ஆர்துரு கூறுகையில்: 49 வது தேசிய தினத்தை முன்னிட்டு நன்றி சொல்லும் விதமாக வாகன அணிவகுப்பை ஏற்பாடு செய்துள்ளோம். எங்களின் இரண்டாம் வீடாக துபாயை கருதுகிறோம். இந்த நாட்டில் நாங்கள் பாதுகாப்பாகவும், நல்லிணக்கத்தோடும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றோம். இந்த நல்ல தருணத்தில் அமீரக துபாய் அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இந்த வாகன அணிவகுப்பின் போது இந்நாட்டு குடிமக்களும், வெளிநாட்டினரும் சகோதரத்துவத்துடன் ஓரணியில் திரண்டு தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டது கூடுதல் சிறப்பு.








You must be logged in to post a comment.