வேளாண்மைத்துறை சார்பில் உலக மண்வள தின நிகழ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் திருப்புல்லாணி வட்டாரத்தில்
தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மற்றும் ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் மோகன்ராஜ் தலைமையில் உலக மண்வள தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் கலந்து கொண்டு மண்ணைப் பராமரித்தல் , அளவிடுதல், கண்காணித்தல், நிர்வகித்தல் பற்றிய விவசாயிகளுக்கு விரிவாக விளக்க உரையாற்றினார்.

மேலும் வேளாண்மை இணை இயக்குனர் மோகன்ராஜ் , வேளாண்மை துணை இயக்குனர் அமர்லால் , வேளாண்மை அறிவியல் நிலையம் இணை பேராசிரியர் முனைவர் ராம்குமார் ஆகியோர் மண்ணின் மலட்டுத்தன்மை குறித்தும் , மண் வளத்தை காப்பது குறித்தும், மண்ணில் இடப்படும் ரசாயன உரங்கள் குறித்தும் மண் மாசடையாமல் பாதுகாப்பு குறித்து , மண்ணின் பௌதிக தன்மையை மேம்படுத்த பசுந்தழை மற்றும் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து மண்வளம் பாதுகாப்பு பற்றி உறுதிமொழி எடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் மற்றும் மண்வளம் பாதுகாத்தல் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் துணை வேளாண்மை அலுவலர் தாமஸ் நன்றியுரை கூறினார்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டபம் வட்டார அட்மா திட்ட பணியாளர்கள் மற்றும் உதவி வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர் . இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!