இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (02.05.2018) ‘கிராம சுவராஜ் அபியான்” (கிராம சுயாட்சி இயக்கம்) திட்டத்தின் கீழ் அறிவுருத்தியுள்ளபடி, வேளாண்மைத்துறையின் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தலைமையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நல்வாழ்வு பணிமனைக் கூட்டத்தினை துவக்கி வைத்தார்.
மத்திய வழிகாட்டுதல் அலுவலர் (ம) மின்னணு தகவல் தொழில்நுட்பவியல் இணைச் செயலர் எஸ்.கோபாலகிருஷ்ணன் திட்ட விளக்கவுரையாற்றினார். இக்கூட்டத்தில் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் சிறப்புரை ஆற்றி இத்துறை மூலம் தமிழக அரசு செய்த சாதனைகளை விளக்கினார்.
பின்னர் இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன், நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி அதிக மகசூல் ஈட்டிய 11 விவசாயிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும்ää 10 விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளும்ää மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தின் சார்பாக 2 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் 1 பயனாளிக்கு சலவைப் பெட்டியும்ää மற்றும் மாவட்ட சமூகநல அலுவலகத்தின் சார்பாக 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பே.இந்திராகாந்தி, கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.டி.மோகன், கடலோர உவர் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.ந.சாத்தையா, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர்.டி.ஏ.விஜயலிங்கம், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சி.இராஜமாணிக்கம், தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) .ஜே.இராஜேந்திரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் .வி.அப்துல்காதர் ஜெய்லானி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, நபார்டு வங்கி மேலாளர் எஸ்.மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பொ.இராஜா உள்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print













